ஆம், இவ்வுலகம் இனியது.
இதுவரை இத்தனை வருடங்களில்
இதை நாம் உணர்ந்துள்ளோம்.
நமது ஐம்புலன்கள் அனைத்தின் வழியாக
இதை நாம் அனுபவித்துள்ளோம்.
உலகின் அழகுக் காட்சிகளில்
நம் கண்கள் விருந்து கொண்டுள்ளன.
இனிய இசையை நம் செவிகளால்
நாம் கேட்டு மகிழ்ந்துள்ளோம்.
கமழும் இனிய நறு மணங்கள்
நம் நாசியினை மகிழ்வித்துள்ளன.
சுவையான உணவும் பழங்களும்
நம் நாவு நல்ருசி உணரவைத்துள்ளன.
தென்றலும் மழையும் சூரியவொளியும்
வெண்பனியும் நம் தொடுஉணர்வுக்கு
மட்டற்ற மகிழ்ச்சி கூட்டியுள்ளன.
உடல் உள்ளம் இரண்டுக்குமே
இவ்வுலகம் இனியதன்றி வேறல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக